யாழ். யுவதிக்கு பிரான்ஸ் நாட்டில் உயரிய விருது

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வி சுவஸ்திகா இந்திரஜித் பிரான்ஸில் வியத்தகு விஞ்ஞான மருத்துவ விருதினை பெற்றுள்ளார். பாரிஸில் வசிக்கும் சுவஸ்திகா பாரி சக்லே (Paris-Saclay) பல்கலைக்கழகப் பட்டதாரியாவார். இந்நிலையில் பிரான்ஸில் உயரிய விருதினை பெற்ற இரண்டாவது தமிழ் பெண்ணாக இவர் பெயரிடப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் சுகாதார சங்கம், பிரான்ஸ் இயற்பியல் சங்கம் என்பன சிமி பிசிக்ஸ் (Chimie-Physique) என்ற அமைப்பும் இணைந்து ஒவ்வொரு வருடமும் சிறந்த விஞ்ஞான ஆய்வுக்கான விருதினை வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2021ஆம் ஆண்டுக்கான விருது, சுவஸ்திகா இந்திரஜித்துக்கு கிடைத்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

 

Fri, 07/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை