அதிபர்,ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகி, முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை நேற்றும் (13) தொடர்ந்தது.

நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் தமது சங்கத்தின் உறுப்பினர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் நேற்று முன்தினம் (12) காலை இந்த தொழிற்சங்க நடவடிக்கையை அவர்கள் ஆரம்பித்தனர்.

தமது கோரிக்கைகளுக்கு கல்வி அமைச்சு இதுவரையில் எவ்வித பதிலையும் வழங்கவில்லை என ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

Wed, 07/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை