மேலும் 70,200 Pfizer தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன

மேலும் 70,200 Pfizer தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன-Another-70200-Dose-Pfizer-COVID19-Vaccine-Arrived-in-Sri-Lanka

- இதுவரை 122,200 Pfizer தடுப்பூசி டோஸ்கள் கொள்வனவு

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 70,200 டோஸ் Pfizer கொவிட்-19 தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன.

இன்று (19) குறித்த தடுப்பூசி தொகுதிகள் விமான நிலையத்தை வந்தடைந்ததாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

கடந்த ஜூலை 05ஆம் திகதி முதற் தடவையாக இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 26,000 Pfizer  கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்திருந்ததோடு, அதனைத் தொடர்ந்து ஜூலை 12ஆம் திகதி மேலும் 26,000 டோஸ் தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்திருந்தன.

அதற்கமைய, தற்போது வந்தடைந்துள்ள தொகுதியுடன் இதுவரை 122,200 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 07/19/2021 - 09:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை