பேராதனை போதனாவில் 45 பேரில் 40 பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று

பேராதனை போதனாவில் 45 பேரில் 40 பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று-45 Out of 40 Security Guards of Peradeniya Teaching Hospital Tested Positive for COVID19

- குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலில்

பேராதனை போதனா மருத்துவமனையின் 45 பாதுகாப்புப் பணியாளர்களில் 40 பேர் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளான பாதுகாப்புப் பணியாளர்களில் 11 பேர் பெண்கள் எனவும் அவர்கள் பேராதனையில்  உள்ள கொவிட் இடைநிலை சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, ஏனைய பாதுகாப்புப் பணியாளர்கள் நாவலப்பிட்டி, குருந்துவத்தை, தெல்தெனிய  கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பேராதனை மருத்துவமனையின் பாதுகாப்பு பணிகளுக்காக,  கண்டி தேசிய மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியல் ஈடுபட்டுள்ள குழுவொன்று தற்காலிகமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் குடும்பங்கள் தத்தமது வீடுகளில் சுயத தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(எம்.ஏ. அமீனுல்லா)

Sun, 07/18/2021 - 20:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை