யாழ்ப்பாணம் உட்பட நாட்டில் நேற்றுவரை 38 டெல்டா திரிபு வைரஸ் நோயாளிகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் உட்பட நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலுமிருந்து  மேலும் டெல்டா திரிபு வைரஸ் தொற்று நோயாளிகள் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 38 டெல்டா திரிபு வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

எனினும் டெல்டா திரிபு என சந்தேகிக்கப்படும் சந்தேகத்திற்குரிய மாதிரிகள் மேலும் சில தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா திரிபு  வைரஸ் பரிசோதனையின்படி கொழும்பு, பிலியந்தலை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் 19 டெல்டா திரிபு வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, நேற்றைய தினமும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் 939 பேர்  பூரண குணமடைந்து ஆஸ்பத்திரிகளிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டில் நேற்றுவரை 02 இலட்சத்து 53 ஆயிரத்து 953 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 07/16/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை