பக்தாத் சந்தையில் தற்கொலை தாக்குதல்: 35 பேர் உயிரிழப்பு

ஈராக் தலைநகர் பக்தாதில் ஹஜ்ஜுப் பெருநாளை ஒட்டி பொருட்கள் வாங்க கூடி இருந்து சனநெரிசல் மிக்க சந்தை ஒன்றில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் குறைந்த 35 பேர் கொல்லப்பட்டதோடு பலரும் காயமடைந்தனர்.

இதற்கு முன்னரும் தாக்குதலுக்கு உள்ளான இதே சந்தையில் உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பாக சம்பவத்தை பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். இதில் 60 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில்

பெண்கள் மற்றும் சிறுவர்களும் இருப்பதோடு சில கடைகள் வெடிப்பினால் தீயில் அழிந்துள்ளன.

சதிர் நகரில் இருக்கும் வஹைலத் சந்தையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இஸ்லாமிய அரசுக் குழு தனது டெலிகிராம் தளத்தின் மூலம் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. தமது போராளி ஒருவர் தற்கொலை அங்கியை கூட்டத்திற்கு மத்தியில் வெடிக்கச் செய்ததாக குறிப்பிட்டுள்ளது. ஈராக்கில் கடந்த ஆறு மாதங்களில் இடம்பெற்ற அதிக உயிர்ப்பலியை ஏற்படுத்திய தாக்குதலாக இது உள்ளது.

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுக்கு எதிராக ஈராக் அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு வெற்றி பிரகடனத்தை வெளியிட்டபோதும் அந்த அமைப்பு நாட்டில் சிறு சிறு குழுக்களாக இயங்கி தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் ஷியா முஸ்லிம்கள் வாழும், சத்ர் நகரத்தில் உள்ள ஒரு சந்தையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கார் குண்டு வெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது.

கடந்த ஜனவரி மாதம் தயரன் சதுக்கத்தில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலையும் தாங்கள் தான் நடத்தியதாக ஐ.எஸ் கூறியது. இந்த குண்டு வெடிப்பில் 32 பேர் கொல்லப்பட்டனர். மூன்று ஆண்டுகளில் தலைநகர் பாக்தாத்தில் நடந்த மிக மோசமான குண்டுவெடிப்பு அதுதான்.

Wed, 07/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை