30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இருமாதங்களுக்குள் ஊசி வடக்கு, கிழக்கிற்கு விசேட தடுப்பூசி வழங்கும் திட்டம்

ஜனாதிபதியுடன் அமைச்சர் நாமல் நடத்திய கலந்துரையாடலில் தீர்மானம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதிக்குள் கொவிட்19 தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் கலந்துரையாடி இவ்விசேட திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். அதற்கமைய, வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொவிட்19 தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Sat, 07/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை