மேலும் 26,000 Pfizer தடுப்பூசிகள் வந்தடைந்தன

மேலும் 26,000 Pfizer தடுப்பூசிகள் வந்தடைந்தன-Another 26000 Dose Pfizer COVID19 Vaccine Arrived in Sri Lanka

- இதுவரை 52,000 Pfizer தடுப்பூசிகள் கொள்வனவு

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 26,000 Pfizer கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அமெரிக்காவில் தயாரிப்பு தடுப்பூசியான Pfizer அமெரிக்காவிலிருந்து கட்டாரின் டோஹாவிற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கத்தார் எயார்வேஸ் QR668 எனும் விமானம் மூலம் இன்று அதிகாலை 2.35 மணியளவில் இல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலைய சரக்கு களஞ்சியதிலுள்ள குளிரூட்டியில் சேமிக்கப்பட்டு, பின்னர் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் குளிர்பதன் வசதி கொண்ட விசேட லொறிகளால், அதன் மத்திய கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதற்கமைய, இதுவரை 52,000 Pfizer தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக, கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ திஸாநாயக்க தெரிவித்தார்.

கடந்த ஜூலை 05ஆம் திகதி முதற் தடவையாக இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 26,000 Pfizer  கொவிட்-19 தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 07/12/2021 - 09:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை