எந்த அரசாங்கம் ஆட்சி செய்தாலும் 2030 வரை வருடாந்தம் 5 பில்லியன் டொலரை கடனாக செலுத்த வேண்டும்

எந்த அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்தாலும் 2030ஆம் ஆண்டு வரை வருடாந்தம் 5 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை வெளிநாட்டுக் கடனுக்காக  செலுத்த வேண்டியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லாமல் ஏதாவது மாற்று வழிகளைத் தேட முடியுமா என்பது பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது அதற்கான முயற்சிகளையும்  மேற்கொள்ள வேண்டியுள்ளது  என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.அவ்வாறு வேறு வழி இல்லாவிட்டால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டி வரும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் வெளிநாடுகளில் உள்ள கடன்களை செலுத்துவதற்காக இந்த வருடத்திலிருந்து 2030 வரை வருடாந்தம் 5 பில்லியன் அமெரிக்கன் டொலரை செலுத்த வேண்டி யுள்ளது என்பதை மறந்து விடக்கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Sat, 07/31/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை