2020இல் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருவருக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை

நோய்ப்பரவல் சூழலால், பசியால் வாடும் மக்களின் விகிதம் 18 வீதம் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு, உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒருவருக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை என்பதை அது வெளியிட்ட ஆய்வறிக்கை சுட்டியது.

பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை, ஓராண்டில் சுமார் 320 மில்லியன் அதிகரித்தது. 10 வயதுக்குட்டபட்டவர்களுக்கு, போதுமான ஊட்டச்சத்தைப் பெறவில்லை.

நோய்ப்பரவல் சூழலில் உலகளாவிய கட்டுப்பாடுகளால், குறைந்த, நடுத்தர வருமான நாடுகளில் பொருளியல் சரிவு ஏற்பட்டது.

இயற்கைப் பேரிடர்கள், வன்முறை மிக்க சர்ச்சைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளிலேயே ஆக அதிகத் தாக்கம் ஏற்பட்டதை அறிக்கை சுட்டியது.

Wed, 07/14/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை