தொடர்ச்சியாக 2ஆவது நாளாக 5 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி

தொடர்ச்சியாக 2ஆவது நாளாக 5 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி-COVID Vaccination-Immunization Progress-July 30-More than 500 thousand Vaccinated Consecutive 2nd Day

- 3 நாட்களில் 15 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி
- இதுவரை சுமார் ஒரு கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி
- இரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள்: 21 இலட்சத்திற்கும் அதிகம்

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைய, தொடர்ச்சியாக 2ஆவது நாளாக 5 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கீழுள்ள தேசிய தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (30) மாத்திரம் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு (513,741) தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின், தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்,

நேற்றையதினம் (28),

- Sinopharm தடுப்பூசியின் முதல் டோஸ், 442,523 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன், அதனை இரண்டாம் டோஸாக 66,219 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- Pfizer தடுப்பூசி முதலாம் டோஸாக 4,999 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் இதுவரை
Covishield:
- 1ஆவது டோஸ் - 925,242 பேர்
- 2ஆவது டோஸ் - 385,885 பேர்

Sinopharm:
- 1ஆவது டோஸ் - 7,639,488 பேர்
- 2ஆவது டோஸ் - 1,733,718 பேர்

Sputnik-V:
- 1ஆவது டோஸ் - 159,081 பேர்
- 2ஆவது டோஸ் - 14,503 பேர்

Pfizer:
- 1ஆவது டோஸ் - 199,100 பேர்

Moderna:
- 1ஆவது டோஸ் - 711,793 பேர்

அந்த வகையில் இதுவரை 96 இலட்சத்து 34 ஆயிரத்து 704 பேருக்கு (9,634,704) முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

21 இலட்சத்து 34 ஆயிரத்து 106 பேருக்கு (2,134,106) இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கி முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

Sat, 07/31/2021 - 10:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை