டெவோன் நீர்வீழ்ச்சியில் இடறி வீழ்ந்த 19 வயது யுவதி மாயம்

டெவோன் நீர்வீழ்ச்சியில் இடறி வீழ்ந்த 19 வயது யுவதி மாயம்-19 Year Old Lady Fell Down From Dewon Waterfall & Missing

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியைப் பார்க்கச்சென்ற யுவதி ஒருவர் இடறி வீழ்ந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இச்சம்பவம் இன்று (18) பிற்பகல் 1.30 மணயளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காணாமல் போனவர் லிந்துலை லென்தோமஸ் பிரிவைச் சேர்நத 19 வயதுடைய மணி பவித்ரா என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

டெவோன் நீர்வீழ்ச்சியில் இடறி வீழ்ந்த 19 வயது யுவதி மாயம்-19 Year Old Lady Fell Down From Dewon Waterfall & Missing

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது குறித்த காணாமல் போன பெண் மேலும் 3 நண்பர்களுடன் மக்கள் செல்வதற்கு தடைசெய்யப்பட்ட நீர்வீழ்ச்சியின் மேற்பகுதிக்கு சென்றுள்ளார்கள். அப்போது கால் கழுவுவதற்கென குறித்த பெண் சென்ற போதே கால் வழுக்கி நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதிக்கு வீழ்ந்ததாகவும் அதனைத்தொடர்ந்து அவர் மாயமாகியுள்ளதாகவும் அவரை கண்டுபிடிப்பதற்கு சுழியோடிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம்.கிருஸ்ணா, ஹட்டன் விசேட நிருபர் - கே. சுந்தரலிங்கம், ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

Sun, 07/18/2021 - 18:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை