கொவிட்-19: மியன்மாரின் நிலை பற்றி ஐ.நா கவலை

கொவிட்-19 வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் மியன்மாரில் அதிவேகமாகப் பரவி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

திடீரென அதிகரிக்கும் நோய்த்தொற்று அபாயகரமானது என்று அது அச்சம் தெரிவித்தது.

இதுவரை மியன்மாரில் 3.1 மில்லியனுக்கும் அதிகமான நோய்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஜூலை மாதத்திலிருந்து ஒட்சிசன் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால், நாட்டில் போதிய அளவை விநியோகம் செய்ய வசதி இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நோய் தொற்று அதிகரித்து வருவதாகவும் கடந்த புதனன்று மாத்திரம் 4,980 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி 365 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

மியன்மாரில் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஏற்பட்ட இராணுவ சதிப்புரட்சி மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் சுகாதாரத் துறையையும் நிலைகுலைச் செய்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இராணுவம ஆட்சியாளர்கள் சுகாதாரத் துறை அதிகாரிகள் பலரையும் கைது செய்தும் பணி நீக்கம் செய்துமுள்ளனர். மியன்மாரில் 40 வீதமான சுகாதார கட்டமைப்பே தொடர்ந்து இயங்கி வருவதாக ஐ.நா கணித்துள்ளது.

Sat, 07/31/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை