பொறுப்பேற்ற மூன்று வாரத்தில் பிரிட்டிஷ் சுகாதார அமைச்சருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று

பிரிட்டனின் புதிய சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித், தமக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

பொறுப்பேற்ற மூன்று வாரத்தில் அவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

அது பற்றித் ஜாவித் Twitter-இல் காணொளி வழி தகவல் அளித்தார்.

இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை அரசாங்கம் இன்னும் இரண்டு நாள்களில் தளர்த்தவிருக்கும் வேளையில் அந்தச் செய்தி வந்துள்ளது.

அடுத்த வாரம் முதல் இங்கிலாந்தில் பொருளியல் நடவடிக்கைகள் மீண்டும் முழுமையாகத் தொடங்குவதற்கான பிரதமர் போரிஸ் ஜோன்சனின் (Boris Johnson) திட்டத்துக்குச் சுகாதார அமைச்சர் ஜாவித் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அவ்வாறு பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினால் தேசிய சுகாதாரக் கட்டமைப்புக்குப் பெரும் ஆபத்து ஏற்படும் என்று பல அறிவியல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.

Mon, 07/19/2021 - 10:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை