கொவிட்-19 தடுப்புமருந்து விநியோகம் குறித்து ஜனாதிபதி பைடனுடன் உரையாடிய நியூஸிலந்துப் பிரதமர்

நியூஸிலாந்திலும், பசிஃபிக் வட்டாரத்திலும் கொவிட் -19 தடுப்புமருந்து கிடைப்பதை உறுதிசெய்யும் முயற்சிகள் குறித்து, நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆர்டன் , அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசியிருக்கிறார்.

பைடனுடன் அவர் தொலைபேசியில் உரையாடினார்.

APEC எனும் ஆசிய பசிஃபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ், தலைவர்கள் கொவிட்-19 பற்றிக் கலந்துபேச ஒன்றுகூடவிருப்பதை முன்னிட்டு இருவரும் உரையாடினர்.

நோய்ப்பரவல் சூழலில் இருந்து வெளிவர, வட்டார அளவில் கூட்டாகப் பணியாற்றுவதன் முக்கியத்துவம் பற்றி இருவரும் பேசியதாகத், திருவாட்டி ஆர்டன் குறிப்பிட்டார்.

ஒன்றுகூடலில் பிரதமர் லீ சியென் லூங், சீன ஜனாதிபதி சி சின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

வெகுவிரைவில் பரவிவரும் கிருமி வகைகளைக் கட்டுப்படுத்த, தடுப்பூசி போடும் திட்டங்களைத் துரிதப்படுத்துவதில் சந்திப்பு கவனம் செலுத்தும்.

Sun, 07/18/2021 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை