ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் முல்லைத்தீவில் தனிமைப்படுத்தல்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது அணிந்து கொள்வதற்காக தாம் உள்ளிட்ட தரப்பினருக்கு பிஜாமா ஆடை வழங்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்ட போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில்

முன்னிலைப்படுத்தப்பட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 33 பேருக்கு பிணை வழங்கப்பட்டது.

பிணை வழங்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிவானை கோரியுள்ளது.அதற்கான அதிகாரம் தமக்கில்லை என நீதிவான் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பிணை கிடைக்க பெற்று நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்ல தயாராகுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதன்போது, நீதிமன்ற வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனையடுத்து, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் முல்லைத்தீவில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Sat, 07/10/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை