சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி 15.9 வீதம் உயர்வு

சிங்கப்பூரின் கடந்த மாத எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி, சென்ற ஆண்டுடன் ஒப்புநோக்க 15.9 வீதம் உயர்ந்துள்ளது.

சிறப்பு இயந்திரங்கள், பெற்ரோலிய இரசாயனம் ஆகியவற்றை உள்ளடக்கிய மின்னியல் சாராப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்தது அதற்கு முக்கிய காரணம்.

தொடர்ந்து மூன்றாவது மாதமாக, எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பதிவான ஆகக்கூடிய அதிகரிப்பு அது. மே மாதத்தில், எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி 8.6 வீதம் கூடியது. கடந்த ஆண்டு ஏற்றுமதிகள் குறைந்ததால், இம்முறை வளர்ச்சி இன்னும் கூடுதலாகப் பதிவானதாக Enterprise Singapore அமைப்பு தெரிவித்தது. மின்னியல் பொருட்களின் ஏற்றுமதியும் அதிகரித்தது. மாத அடிப்படையில், ஜூன் மாதத்தில் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி 6 வீதம் ஏற்றம் கண்டது. மே மாதத்தில் அது 0.2 வீதம் குறைந்திருந்தது.

Sun, 07/18/2021 - 19:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை