1.39 கோடி ரூபா பொலிஸாரால் மீட்பு

கொழும்பு, கொட்டாவ பகுதியில் சம்பவம்

கொட்டாவ பகுதி வீடொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1.39 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ரன்மல்லி என்பவரின் மனைவியின் சகோதரரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

பன்னிபிட்டிய பகுதியில் வைத்துக் இந் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர் தற்காலிகமாகத் தங்கியிருந்த வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 13.9 மில்லியன் ரூபா பணத்தைப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.துபாயில் வசித்துவரும் போதைப் பொருள் கடத்தல் காரரான, ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தன என்பவரின் நெருங்கிய நண்பரான ‘ரன் மல்லி’ என்பவரின் மைத்துனரின் வீட்டிலேயே இந்த பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

 

Mon, 07/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை