பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்

பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஒரு கிலோ மாவின் விலை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரத்திலிருந்து பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

செரண்டிப் நிறுவனம் கடந்த வாரம் முதல் ஒரு கிலோ மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இதற்கு முன்னர் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை ஐந்து ரூபா முதல் பத்து ரூபா வரை அதிகரிக்க நேர்ந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 07/01/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை