இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா ஓகஸ்ட் 08 வரை நீடிப்பு

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா ஓகஸ்ட் 08 வரை நீடிப்பு-All Types of VISA for Foreigners Visa Extended From July 09 to August 08

தற்போது இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் இன்று (09) முதல் ஓகஸ்ட் 08 வரை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற்  கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் காலவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான வீசாக்கட்டணம் மாத்திரம் அறவிடப்படும் என்பதுடன், அதற்காக எவ்வித தண்டப்பணமும் அறிவிடப்படாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலா வீசாக்களை கொண்டிருப்பவர்கள், வீசாக்களை மேலொப்பமிடுவதற்கு,

eservices.immigration.gov.lk/vs எனும் இணையத்தளத்திற்கு சென்று கட்டணத்தை செலுத்தி, Onine வீசாக்களை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப் பகுதியில் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு உத்தேசிக்கும் நிலையில், உரிய வீசாக் கட்டணத்தை விமான நிலையத்தில் செலுத்தி நாட்டை விட்டு வெளியேற முடியும்.
2021 ஓகஸட் 08ஆம் திகதிக்கு முன்னர் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்திற்கு வந்து உரிய வீசா கட்டணத்தை செலுத்தி வீசாகை கடவுச்சீட்டில் மேலொப்பமிட்டுக் கொள்ள முடியும்.

மேலதிக தகவல்களுக்கு
immigration.gov.lk

Fri, 07/09/2021 - 10:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை