அமெரிக்க USAID மூலமாக அவசர மருத்துவ பொருட்கள்

- விமானம் மூலம் நேற்று இலங்கை வந்தடைவு

அமெரிக்க அரசாங்கம், தமது சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனமான யூஎஸ்எயிட் (USAID) மூலம், மாலைதீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு அவசர மருத்துவப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது.

விமானங்கள் மூலம் இவை அனுப்பி வைக்கப்பட்டதாக யூஎஸ்எயிட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு 8,80,000 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் 1,200 துடிப்பு ஒக்சிமீட்டர்கள் ஆகியவை முன்னணி சுகாதார ஊழியர்களுக்கும் கொரோனாத் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வர்களுக்குமென அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த, அமெரிக்காவும் இலங்கையும் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளன, மேலும் யூஎஸ்எயிட் இன் உதவி, நாடு முழுவதுமுள்ள 25 மாவட்டங்கள் மற்றும் ஒன்பது மாகாணங்களிலுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு பயனளித்துள்ளது. தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ள உதவிகள், உயிர் காக்கும் சிகிச்சைகள் மற்றும் மருத்துவ கவனிப்பை வலுப்படுத்துமென்று யூஎஸ்எயிட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையின் கொரோனா மீட்பில் உதவுவதற்காக அமெரிக்க அரசாங்கம் 311.3 மில்லியனை இலங்கைக்கு வழங்கியுள்ளது, இதில் மோசமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள நோயாளிகளைப் பராமரிப்பதற்காக 200 செயற்கை சுவாச கருவிகள் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும் யூஎஸ்எயிட் தெரிவித்துள்ளது.

Fri, 06/04/2021 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை