Smartphone கொள்வனவு செய்ய ஆசிரியர்களுக்கு விசேட கடன்

கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

அரசாங்க பாடசாலை ஆசிரியர்களுக்கு டெப் அல்லது கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்வதற்காக கடன் ஒன்றை பெற்றுக்கொடுக்கத் தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக சலுகை கடன் ஒன்றை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அரச வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் நேற்று தெரிவித்த அவர்;

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கும் மாணவர்கள் போன்றே பெரும் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அதனைக் கருத்திற்கொண்டே ஆசிரியர்களுக்கு கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்வதற்காக சலுகை கடன் ஒன்றை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இக்காலங்களில் ஒன்லைன் மூலமான கல்வி செயற்பாடுகளில் பயன்பெற முடியாத நிலையிலுள்ள மாணவர்களுக்காக விசேட செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 06/22/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை