பயணக்கட்டுப்பாடுகளை நீடிக்க SLMA கோரல் ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பி வைப்பு

நாட்டில் நடைமுறையிலுள்ள பயணத் தடையை தளர்த்தாது தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு இலங்கை மருத்துவர் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தீர்க்கமானதொரு காலகட்டத்தில் பயணத் தடையை தளர்த்தினால் கடந்த ஏப்ரல் மாதம் பயணத் தடையை தளர்த்தியதால் ஏற்பட்ட மோசமான நிலையையே மீண்டும் எதிர்கொள்ள நேரும் என்றும் அந்த சங்கம் எச்சரித்துள்ளது

நாட்டில் தற்போது தினமும் 2,000க்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டும் 50க்கும் மேற்பட்டோர் மரணமடைகின்ற நிலையே காணப்படுகிறது. அத்துடன் மிக விரைவாக பரவக்கூடிய டெல்டா திரிபு கொரோன வைரஸ் நாட்டில் சிலரிடமிருந்து அடையாளம் காணப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் பயணத்தடையை தளர்த்தி இந்த நிலைமையை மேலும் மோசமாக்கிவிட வேண்டாமெனவும் அந்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கை மருத்துவர் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அது தொடர்பில் எழுத்து மூலமான கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 06/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை