வவுனியாவில் PHI ஒருவர் மீது தாக்குதல்!

பொலிஸார் தீவிர விசாரணையில்

வவுனியா – சாந்தசோலை பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

முகக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை பொதுச் சுகாதார பரிசோதகர் எச்சரித்தபோது, அதனை கவனத்தில் கொள்ளாத இளைஞர் பொதுச் சுகாதார பரிசோதகரை தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

25 வயது இளைஞர் ஒருவரே பொதுச் சுகாதார பரிசோதகரை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

 

Fri, 06/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை