மின்னொளி பூஜை இன்று பிரதமர் தலைமையில்

அநுராதபுர, மிஹிந்தலை புராதன ரஜ மகா விகாரையை மையமாகக் கொண்டு லேக்ஹவுஸ் நிறுவனம் 59ஆவது தடவையாக நடாத்தும் ஆலோக்க பூஜா’ (மின்னொளி பூஜை) புண்ணிய விழா பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இன்று ஆரம்பிக்கப்படும்.

மஹிந்த தேரர் இந் நாட்டில் பௌத்த மதத்தை வியாபிக்க வருகை தந்த 2329 வது பொசன் போயா தினம் (24) வியாழக்கிமையில் அமைந்துள்ளது.

இந்த மின்னொளி புண்ணிய விழா மூன்று நிக்காயக்களையும் சேர்ந்த பிரதம தேரர்களின் ஆசிர்வாதத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படும். புராதனமான மிகிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவே தம்ம ரத்ன தேரரின் அறிவுரையின்படி லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ.தயாரத்னவின் ஆலோசனைக்கமைய இந்த மின்னொளி பூஜை நடைபெறுகின்றது.

Wed, 06/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை