சீன குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்கவும்

உலக நாடுகளிடம் சீன சிறுபான்மையினங்கள் கோரிக்கை

கடந்த வாரம் பாரீஸ் வெஸ்டைல் சதுக்கத்தில் கூடிய நூற்றுக்கணக்கான சீனாவைச் சேர்ந்த சிறுபான்மை இன மக்கள் ஒன்று கூடி அடுத்த வருடம் பீஜிங்கில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திபெத்தியர், மங்கோலியர்கள், உய்கர் இனத்தோர், வியட்நாமியர், ஹொங்கொங் மற்றும் தைவானியர் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். சீனாவில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் சீன அரசினால் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் நசுக்கப்படுவதாகவும் கூறிய உலக நாடுகள் சீன குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

உலக ஒலிம்பிக் தினமான ஜூன் 23ம் திகதி அறுபது உலக நகரங்களில் இத்தகைய சீன ஒலிம்பிக்கை 'இனப்படுகொலை விளையாட்டு' என்று அழைக்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கடந்த ஆண்டு செப்டெம்பர் முதலே குளிர்கால ஒலிம்பிக் எதிர்ப்பாளர்கள் ஏன் சீன ஒலிம்பிக்கை புறக்கணிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை உலக நாட்டுத் தலைவர்களுக்குத் தெரிவிக்கும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

2008 பீஜிங் ஒலிம்பிக் விளையாட்டின் பின்னர் சீனாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்ததாகக் குறிப்பிடும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், குளிர்கால ஒலிம்பிக் நடத்தப்படுமானால் சீன மனித உரிமை துஷ்பிரயோகங்களுக்கு அங்கீகாரம் அளித்ததாகிவிடும் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேசமயம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுத் தலைவர் மிஷேல் பச்சலட், சீன ஸின்ஜியாங் மாநிலத்துக்கு விஜயம் செய்து அங்கு வாழும் உய்கர் முஸ்லிம் சமூகத்தின் மீது நடத்தப்படுவதாக வெளிவரும் செய்திகள் தொடர்பாக நேரில் ஆய்வுசெய்ய விரும்புவதாகவும் சீன அரசுடன் இது தொடர்பாக இணக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Mon, 06/28/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை