சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் களத்தில்

யாழ்ப்பாணம், அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரியாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் நேற்று (06) நேரடியாக சென்ற கடற்றொழில் அமைச்சர், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள், பொலிஸார், படைத் தரப்பினர் மற்றும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.

பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நேற்றைய விஜயம் அமைந்திருந்தது.

சட்ட விரோத மணல் அகழ்வு முற்றாக கட்டுப்படுத்தப்பட வேண்டுமாயின், பாதுகாப்பு தரப்பினர் காவலரண்களை அமைத்து கண்காணிக்க வேண்டுமென பிரதேச மக்களினால் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடிய அமைச்சர், அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்ட விரோத மணல் அகழ்வை முழுமையாகக் கட்டுப்படுத்துமாறு தெரிவித்தார்.

Mon, 06/07/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை