இந்துக்களின் தர்மசாலா கட்டட இடிப்பு; பாக். உச்ச நீதிமன்றம் தடையாணை

ஒரு வர்த்தகக் கட்டடத் தொகுதியொன்றை அமைக்கும் பொருட்டு பாகிஸ்தான் இந்து சமூகம் பயன்படுத்திவரும் தர்மசாலா கட்டடத்தை இடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது.

மேலும் அக்காணியை பொறுப்பேற்குமாறு பாரம்பரிய விவகாரங்களுக்கான சிந்து மாகாண குழுச் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதோடு அக் கட்டடம் தொடர்பான முழு விவகாரங்களையும் சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளது.

கராச்சியில் அமைந்துள்ள தர்மசாலா கட்டடமே இடிக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தது. மீட்பு ஆதன நிதிய சபையே ஒரு தனியாருக்கு தர்மசாலா காணியை கடந்த ஆண்டு குத்தகைக்கு விட்டிருந்தது.

இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கிலேயே உயர் நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்தது.

கடந்த ஆண்டு ஒரு இந்து மதப் புனிதருக்கான கோவில் தீ வைக்கப்பட்டு சூறையாடப்பட்ட சம்பவம் கராச்சியில் நடைபெற்றிருந்தது. எனினும் இவ்வாறான சம்பவங்களின் பேரில் நீதிமன்றங்கள் நீதியான, பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்வதை காண முடிகிறது.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதில் பாகிஸ்தான் அக்கறை கொண்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி முல்தானில் அமைந்துள்ள பரமாம்சஜி மஹாராஜா கோவில் புனரமைக்கப்படுவதோடு பிரகலத கோவில் ஹோலி பண்டிகை கொண்டாட்டமும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Fri, 06/18/2021 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை