முல்லைத்தீவில் வாகன விபத்து

முல்லைத்தீவு மாங்குளம் - மல்லாவி பிரதான வீதியில் கெண்டெய்னர் வாகனமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த வாகன சாரதி மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு கோதுமை மாவை ஏற்றிக்கொண்டு வந்த வாகனமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது. சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு பிரதான காரணமென ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

Sat, 06/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை