அமெரிக்க நிறுவனத்தில் சீன அனுசரணை சைபர் தாக்குதல்

அமெரிக்காவின் மெட்ரோ போக்குவரத்து அதிகாரசபையின் வலையமைப்புக்குள் சீன அரசின் அனுசரணையுடையவர்கள் என நம்பப்படும் ஊடுருவிகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஊடுருவல் பற்றி எப்.பி.ஐ, என்.எஸ்.ஏ மற்றும் இணைய பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி தம்மை எச்சரித்ததாக அந்த நிறுவனம் குறிப்பிட்டது.

அந்த நிறுவனத்தின் குறைந்தது ஒரு மெய்நிகர் தனியார் வலையமைப்பில் ஊடுருவியதன் மூலம் 18 தரவுத்தள அமைப்புகளில் குறைந்தது மூன்றை அணுக முடிந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சைபர் தாக்குதலினால் எந்த ஒரு ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களும் பாதிக்கப்படவில்லை என்றபோதும் சில ஒப்பந்ததாரர்கள் பாதிப்படையலாம் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Sat, 06/05/2021 - 08:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை