யாழ்., மட்டக்களப்பில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

இராணுவ தளபதி அறிவிப்பு

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு யாழ்ப்பாணம் உட்பட மூன்று மாவட்டங்களில் ஆறு கிராமசேவகர் பிரிவுகள் நேற்று தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல் மாவட்டங்களில் 5 பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகள் நேற்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டுத் மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றுக் காலை 6 மணி முதல் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெக்லமேஷன் மேற்கு, குருநகர் மேற்கு கிராம சேவகர் பிரிவுகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஞ்சந்தொடுவாய் வடக்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் மஞ்சந்தொடுவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவில் ஜின்னா வீதி, மண்முனை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த மாமாங்கம் கிராமசேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை குருநாகல் மாவட்டத்தில் விலகொட மற்றும் கனுக்கெட்டிய கிராமமும் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 06/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை