வருமானம் குறைவு; செலவினம் அதிகரிப்பு: அரசாங்கத்திற்கு நாளாந்தம் பலகோடி ரூபா இழப்பு

அரச கணக்காய்வாளர் திணைக்களம்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டால் அரசாங்கம் நாளாந்தம் பல்லாயிரம் கோடி ரூபா வருமானத்தை இழந்துள்ளது. வருமானங்கள் குறைவடைந்திருந்தாலும் செலவினங்கள் அவ்வாறே முன்பைப் போல காணப்பட்டதாக அரசாங்க கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.

நாளாந்த செலவினங்களுக்கு மேலதிகமாக கொவிட்19 ஒழிப்பு வேலைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடுகளை செய்வதும் அவசியமாகும்.

இவ்வாறான சவால் நிறைந்த காலத்துக்கு மத்தியிலும் அரசாங்கம் மக்களுக்கான நிவாரணங்களை தொடர்ந்தும் வழங்கி வருகிறது. அரசாங்கத்துக்கு கூடுதலான வருமானத்தை ஈட்டித்தரும் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம், குடிவரவு, குடியகல்வு திணைக்களம், சுங்கத் திணைக்களம், சுற்றுலாத் துறை உட்பட பல்வேறு நிறுவனங்களின் வருமானங்கள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.

இவ்வாறான நிலையிலும் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் உரிய முறையில் வழங்கப்பட்டு வருகிறது. சில அரச நிறுவனங்களில் பணியாற்றும் உயரதிகாரிகள் அலுவலகங்களுக்கு வருகை தராவிட்டாலும் அவர்கள் தொடர்ந்தும் எரிபொருள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் அரசாங்கத்திற்கான நிரந்தரமான வருமானங்கள் அனைத்தும் தடைப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Tue, 06/22/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை