விவசாயிகளுக்கு இயற்கைப் பசளையை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானம்

உற்பத்தியை ஊக்குவிக்க அரச வங்கிக் கடன்

விவசாயிகளுக்கு தேவையான இயற்கைப்பசளையை இலவசமாக பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இயற்கைப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு தேவையான ஒத்துழைப்பைப் பெற்றுத் தருமாறும் ஜனாதிபதி மாகாண ஆளுநர்களைக் கேட்டுக்கொண்டார். இயற்கை பசளையை உற்பத்தி செய்வதற்காக சிறு வியாபாரிகள் மற்றும் விவசாய சங்கங்களுக்கு தேவையான நிதி உதவி மற்றும் அரசாங்க வங்கிகள் ஊடாக சலுகை வட்டியில் கடன்களை பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற மாகாண ஆளுநர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண ஆளுநர்கள்,ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜயசுந்தர,ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க உள்ளிட்ட உயர் மட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் மாகாண ஆளுநர்கள் கருத்து தெரிவித்த போது;

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதுகாப்பதற்கு உள்ள சவால்களையும் நாட்டின் எதிர்கால வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவது தொடர்பில் மாகாண ஆளுநர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 06/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை