மரக்கறி, மீன்வகைகள் ச.தொ.ச மூலம் விநியோகம்

நாட்டில் பயணத் தடை நடைமுறையில் உள்ள நிலையில் வெகுவாக அதிகரித்து வரும் மரக்கறி விலைகளை கட்டுப்படுத்தும் வகையில் மரக்கறி மற்றும் மீன்களை ச.தொ.ச. மூலம் விநியோகிப்பதற்கு புதிய வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வாகனங்களில் நடமாடும் மரக்கறி, பழங்கள் மற்றும் மீன் வகைகளை விற்பனை செய்வோர் உரிய விலையை காட்சிப்படுத்துவதை கட்டாயப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதே போன்று பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் பேலியகொடைமெனிங் வர்த்தக சந்தை ஆகியவற்றின் மொத்த  மற்றும் சில்லறை விற்பனை விலைகளை ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் விவசாயிகள் தமது மரக்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்வதற்கு வசதியாக நகர்ப்புறங்களில் சிறிய வர்த்தக மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 06/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை