பாராளுமன்றம், மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க முன்மொழிவு

தேர்தல் மற்றும் தேர்தல் விதிகளை சீர்திருத்துவது தொடர்பான நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகள்;

பாராளுமன்ற மற்றும் மாகாண மட்டங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 30 முதல் 70 சதவீதத்திற்கு இடைப்பட்ட வகையில் பேணுவதற்காக விசேட முன்மொழிவொன்றை சீர்திருத்த மற்றும் தேர்தல்கள் சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எழுத்து பூர்வமாக சமர்பிக்க தீர்மானித்துள்ளது.

இராஜங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தலைமையில் நடைபெற்ற மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கூட்டத்திலேயே இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றங்களில் 25சதவீத பெண்களுக்கான ஒதுக்கீட்டை தொடர்ந்து மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் அனைத்து தேசிய கட்சிகளின் தேசிய பட்டியல்களில் மூலம் 50 சதவீத ஒதுக்கீடுகள் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற யோசனை யும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தல் வன்முறையைக் குறைக்க போதுமான சட்டங்களை இயற்றுவது, ஆண்டுதோறும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அத்தியாவசிய அறிவிப்புகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து ஆணைக்குழுகளிலும், அரச பொறுப்பாளர்களிலும் பெண்களின்

பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் குறித்தும், தலைமை பதவிகள், குழு பதவிகள், நிர்வாக பதவிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் தெரிவின் போது பெண்களுக்கும் சரிசமமாக பகிர்ந்தளித்தல் வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இந்த தீர்மானங்களை உரிய தரப்பினருக்குள எழுத்துமூலம் உத்தியோகப்பூர்வமாக அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Tue, 06/29/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை