கொரோனாவால் அபிவிருத்திகள் எதுவும் தாமதமாகவில்லை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையின் முக்கிய அபிவிருத்தி, உட்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு எதுவும் தாமதமாகவில்லை.

இலங்கையில் கொவிட் தொற்று பரவாமல் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் படைத் தலைவருமான இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

"ஆசியாவின் அடுத்த வளர்ச்சி மிகு சொர்க்கம் இலங்கை" என்ற கருப்பொருளில் 65 க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட கருத்தரங்கொன்று இலங்கை முதலீட்டு மன்றத்தில் (எஸ்.எல்.ஐ.எஃப்) நடைபெற்று வருகின்றது.

இந்த கருத்தரங்கு கடந்த 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் இரண்டாவது நாளான நேற்று பாதுகாப்புப் படைத் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா சிறப்பு விருந்தினராகவும் விசேட பேச்சாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் கொவிட்டை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் (NOCPCO) தலைவராக 'COVID 19 தொற்றுநோயை நிர்வகித்தல், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை பாதுகாத்தல்' என்ற தலைப்பில் பேச நிபுணத்துவம் பெற்ற வள பணியாளர்களில் ஒருவராக அவர் அழைக்கப்பட்டார்.

"கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், தொழில்துறை மற்றும் வணிக முன்னேற்றத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் சேவை வசதிகளை கட்டியெழுப்ப இலங்கை உறுதியளித்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்நிபந்தனையாவதுடன் வெளிப்புற மற்றும் உள் பொருளாதார கூட்டாண்மை ஆகும். இலங்கையின் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொற்றுநோய் காரணமாக தாமதமாகவில்லை. தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஒருபோதும் சவாலாகவில்லை.
பாதுகாப்பான சுற்றுலாவுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம். இலங்கை ஒரு பாதுகாப்பான இடமாக இருப்பதற்கு நீண்ட கால மற்றும் குறுகிய கால சுற்றுலா பயணிகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. சுற்றுலா, விளையாட்டு மற்றும் இராஜதந்திர வருகைகளில் 'பயோ செக்யூர் பப்பில்' உருவாக்கி மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரையிறங்குவதில் மற்றும் துறைமுகத்திலிருந்து புறப்படும் வரை பாதுகாப்பான சூழலை வழங்குவதில் இலங்கை தனது திறன்களை நிரூபித்துள்ளது. இந்த அம்சத்தில், நாங்கள் நவீன மற்றும் தரமான சேவையை வழங்க உள்கட்டமைப்பு, போக்குவரத்து, உணவு மற்றும் பானம் மற்றும் சுகாதார வசதிகளை மறுசீரமைத்துள்ளோம். இவ்வாறு "ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.

Wed, 06/09/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை