கொரோனா ஆய்வுகூட கசிவு: பிரிட்டன் பேராசிரியர் கூற்று

சீன விஞ்ஞானிகளால் வூஹான் ஆய்வுகூடத்தில் கொவிட்-19 தொற்று உருவாக்கப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் பேராசிரியர் அன்குஸ் டெல்கெயிஷ் மற்றும் நோர்வே விஞ்ஞானி டொக்டர் பிர்கர் சொரென்சஸ் குறிப்பிட்டுள்ளனர்.

‘சீன ஆய்வுகூடங்களில் இது தொடர்பிலான தரவுகளை வேண்டுமென்றே அழித்தல், மறைத்தல் மற்றும் மாசுபடுத்தல்’ இடம்பெற்றிருப்பதாக இந்த ஆய்வில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆய்வுகூடத்தில் இருந்து இந்த வைரஸ் தவறுதலாக கசிந்தது உட்பட வைரஸின் மூலத்தை கண்டறிவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உளவுப் பிரிவினருக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த வைரஸ் ஆய்வுகூடத்தில் இருந்து பரவியது என்ற கூற்றை உலக சுகாதார அமைப்பு நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 06/04/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை