சல்மான் வஹாப் ஆசிரிய‌ர் ஐக்கிய‌ காங்கிர‌சின் க‌ல்குடா தொகுதி அமைப்பாள‌ராக‌ நிய‌ம‌ன‌ம்

சீனிப்போடியார் வீதி, ஓட்டமாவடி -01யைச் சேர்ந்த‌ விஞ்ஞானப்பாட ஆசிரிய ஆலோசகர் முகம்மது இஸ்மாயில் சல்மான் வஹாப் ஆளும் ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌வின் ப‌ங்காளிக்க‌ட்சியான‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் (உல‌மா) க‌ட்சியில் இணைந்துள்ளார்.

விஞ்ஞான‌ க‌ல்வி ப‌ட்ட‌தாரியான‌ இவ‌ர், எம் ஏ (RD) த‌க‌மை பெற்றுள்ள‌ புத்திஜீவி ஆவார்.

இவ‌ர் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் க‌ல்குடா தொகுதிக்கான‌ அமைப்பாள‌ராக‌ க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதினால் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.

அரசியல் செயற்பாடுக‌ளில் ஆர்வ‌ம் உள்ள‌ இவ‌ர், க‌லைத்துறையில் குறிப்பாக‌ மலேசிய வெளியீடுகளுடன் கலந்த நீண்டகால கலைத்துறைசெயற்பாடுகளை கொண்ட‌வ‌ர்.

ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌, பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ அரசுக்கு நிறைவான ஆதரவு த‌ரும் ஐக்கிய‌ காங்கிர‌சின் நேர்மையான‌, தூய்மையான‌ அர‌சிய‌லால் க‌வ‌ர‌ப்ப‌ட்டு அக்க‌ட்சியை ச‌மூக‌த்தில் ப‌ல‌ப்ப‌டுத்த‌ வேண்டிய‌ க‌ட‌ப்பாட்டுட‌ன் இருப்ப‌தாக‌ சல்மான் வ‌ஹ்ஹாப் தெரிவித்தார்.

Tue, 06/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை