உய்குர் தீர்ப்பாயத்தின் விசாரணைகள் ஆரம்பம்

சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் அவலத்தை ஆராயும் சுயாதீன விசாரணை குழு ஒன்று துன்புறுத்தல்கள் மற்றும் கூட்டு கற்பழிப்புச் சம்பவங்கள் குறித்து லண்டனில் வாக்குமூலங்களை பெற்று வருகிறது.

பிரிட்டனைத் தளமாகக் கொண்ட உய்குர் தீர்ப்பாயத்தினால் நடத்தப்படும் இந்த விசாரணை கடந்த ஜூன் 4 ஆம் திகதி ஆரம்பித்து இன்று 7 ஆம் திகதி வரை நீடிக்கிறது. இதில் சின்ஜியாங் பிராந்தியத்தில் உய்குர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து இந்த விசாரணை அறிக்கை இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படவுள்ளது.

இந்த உய்குர் தீர்ப்பாயம் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதமே ஆரம்பிக்கப்பட்டது.

Mon, 06/07/2021 - 08:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை