சுகாதார அமைச்சினால் விமானப் படைக்கு சுகாதார உபகரணங்கள்

சுகாதார அமைச்சினால் விமானப் படைக்கு சுகாதார உபகரணங்கள்-SLAF Receives Generous Donation from Ministry of Health

சுகாதார அமைச்சினால் இலங்கை விமானப் படைக்கு ஒருதொகை சுகாதார உபகரணங்கள் நேற்று (09) கையளிக்கப்பட்டது. 

கொழும்பிலுள்ள விமானப் படைத் தலைமையகத்திற்கு நேற்று விஜயம் செய்த ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள்மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவிடம் அவற்றை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

சுகாதார அமைச்சினால் விமானப் படைக்கு சுகாதார உபகரணங்கள்-SLAF Receives Generous Donation from Ministry of Health

கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்தும் பொருட்டு சுகாதார அமைச்சுடன் நேரடியாக இணைந்து செயற்படும் இலங்கைவிமானப் படை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்திற்கொண்டே ஒரு தொகை உபகரணங்கள் சுகாதார அமைச்சினால் கையளிக்கப்பட்டதாக விமானப்படையின் பேச்சாரளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்ஹ தெரிவித்தார். 

வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுப்படும் படைவீரர்கள் பயன்படுத்துவதற்காக, தனிபட்ட பாதுகாப்பு அங்கிகள் (PPE) ஒட்சிசன் அளவீட்டு கருவிகள் (Pulse Oximeters), ஒட்சிசன் செறிவாக்கிகள் (Oxygen Concentrators) உள்ளிட்ட உபகரணங்களே இவ்வாறு கையளிக்கப்பட்டன.  

சுகாதார அமைச்சினால் விமானப் படைக்கு சுகாதார உபகரணங்கள்-SLAF Receives Generous Donation from Ministry of Health

இந்நிகழ்வில் இலங்கை விமானப் படையின் முகாமைத்துவ சபையின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

விமானப் படைத் தளபதியின் அலுவலகத்திற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் கொவிட் தொடர்பான தற்போதைய நிலைமை தொடர்பிலும் விஷேட கலந்துரையாடலில் ஈடுப்பட்டதுடன், விமானப் படைத் தலைமையகத்தில் உள்ள விஷேட பிரமுகருக்கான புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.

ஸாதிக் ஷிஹான்

Thu, 06/10/2021 - 11:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை