பெறுமதியான அரச காணிகள்; சீனாவுக்கு அரசு வழங்கப்போவதாக திட்டமிட்ட பொய் பிரசாரம்

அரசாங்கத்துக்குச் சொந்தமான பெறுமதிவாய்ந்த காணிகளை சீனாவின் திட்டங்களுக்கு வழங்க அரசாங்கம் தயாராவதாக திட்டமிட்ட ரீதியில் பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.  

நாட்டில் பயன்படுத்தப்படாது சேதமடைந்துள்ள கட்டடங்கள் பலவற்றை மீளமைத்து நாட்டுக்குப் பயனுள்ள வருவாயைப் பெறும் இடங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அதற்கான அமைச்சவை பத்திரம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவிக்கையில், தபால் திணைக்களத்துக்கு சொந்தமான கட்டடத்தில் 45,000 சதுர அடியை பயன்படுத்துவது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறே கொழும்பு, கோட்டையிலுள்ள கபூர் கட்டடம் சேதமடைந்து வருகிறது. அவ்வாறான கட்டடங்களை மீளமைத்து நாட்டுக்குப் பயனுள்ளதாக மாற்ற முயற்சிக்கும் போது சீனாவை தொடர்புபடுத்தி சில ஊடகங்கள் விமர்சனம் செய்கின்றன. திட்டமிட்டு இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. எதிர்க்கட்சியின் பங்களிப்பை தவறாக பயன்படுத்துவது உகந்ததல்ல என்றார். (பா)

ஷம்ஸ் பாஹிம்     

Wed, 06/02/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை