மிஹிந்தலை புனித பூமியில் அரச பொசொன் விழா

ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பர்

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய அரச பொசொன் உற்சவம் மிஹிந்தலை ரஜமஹா விஹாரையை மையமாகக் கொண்டு உரிய மரியாதையுடன் ஏற்பாடு செய்யுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று முன்தினம் (17) அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மிஹிந்தலை புனித பூமியில் நடைபெறும் அரச பொசொன் உற்சவம் தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இம்முறை அரச பொசொன் விழாவை முன்னிட்டு பிரதான  நிகழ்வு சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம ரஜ மஹா விகாரையை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரச பொசொன் விழாவை முன்னிட்டு மிஹிந்தலை சுற்றுவட்ட பாதையை புனரமைத்து தருமாறு மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய வளவாஹெங்குனவெவே தம்மரதன தேரர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

அவரது கோரிக்கையை துரிதமாக நிறைவேற்றுமாறு பிரதமரினால் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர் பேமசிறிக்கு அறிவுறுத்தப்பட்டது.

சிதுல்பவ்வ ரஜ மஹா விகாரை 2007ஆம் ஆண்டு புனித பூமியாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட போது ஏற்பட்ட பிழைகள் காரணமாக புனித பூமி ஒன்றுக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் இன்றுவரை வழங்கப்படவில்லையென்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

 

 

Sat, 06/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை