சேதனப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவை

முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவோம்

ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதனப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவையாகியுள்ளதுடன், அதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்துவது முக்கியமாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். சேதனப் பசளை மற்றும்  சேதனப் பயிர்ச்செய்கை தொடர்பில் அலரி மாளிகையில் (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விவசாய பெருமக்கள் மத்தியில் இது தொடர்பில் தவறான கருத்து ஏற்படுத்தப்பட்டுள்ளமையால் அவர்களுக்கு விழிப்பூட்டுவதற்கான முறையான வேலைத்திட்டமொன்று அவசியமெனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பாடசாலைகள் மற்றும் விகாரைகளை மையமாகக் கொண்டு சேதனப் பயிர்ச்செய்கைக்கு பிள்ளைகள் மற்றும் மக்களை பழக்கப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுடன் கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வருமாறு பிரதமர் இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். சேதனப் பயிர்ச்செய்கையை நாட்டில் விரிவுபடுத்துவதற்கான நிபுணர்களின் ஆதரவை பாராட்டுவதாக தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சேதனப் பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஜனாதிபதியும் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

முறையான வேலைத்திட்டமொன்றின் மூலம் நாட்டில் ஆரோக்கியமான மக்களை உருவாக்குவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமென்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

Tue, 06/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை