இந்தியாவின் பிரிக்கமுடியாத பகுதியே ஜம்மு காஷ்மீர்

இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

எத்தனை கேள்விகள் எழுப்பப்பட்டாலும் அல்லது எவ்வளவு நியாயங்கள் காட்டப்பட்டாலும் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முழுமையான பகுதி என்பதில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஏற்கத்தக்கதல்ல என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருக்கு ஜம்மு காஷ்மீர் தொடர்பாக ஒரு கடிதம் தொடர்பாக இந்திய வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்‌ஷியிடம் கேட்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் இந்தியா மேலும் சட்டத்துக்கு புறம்பான மற்றும் தன்னிச்சையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக குரேஷி ஐ.நா. செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக ஜியோ நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா உட்பட சகல அண்டை நாடுகளுடனும் சமாதானத்தை பேணவே பாகிஸ்தான் விரும்புகிறது என்றும் ஆனால் பலன்களைத்தரக்கூடிய தொடர்புகளை பாகிஸ்தானுடன் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவையே சார்ந்தது என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mon, 06/21/2021 - 13:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை