பாகிஸ்தான் அதிகாரி ஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவால் கைது

ஆப்கானிஸ்தான் எல்லை பிரதேசத்தில் வைத்து  ஆப்கானிஸ்தான் உளவுத்துறையால் பாகிஸ்தான் அதிகாரி அஸிம் அக்தர் என்பவர்  பிடிபட்டுள்ளார். அவரது நோக்கம் தலிபான்களுடன் இணைந்து போராடுவதாகும்.

கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்தர், தலிபான்களுடன் சண்டையிட்டதாக ஒப்புக்கொண்டார். வெளிநாட்டு படைகளை ஆப்கானிஸ்தான்  திருப்பி அனுப்பி வரும் நிலையிலும்  ஆப்கானிஸ்தானில் தலிபான்  தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையிலுமே  இவர் பிடிபட்டுள்ளார்.தான் ஒன்றரை ஆண்டு இராணுவப் பயிற்சியைப் பெற்றதாக குறிப்பிட்டுள்ள அவர்.

"நான் காஷ்மீரில் போராட அனுப்பப்பட்டேன், பின்னர் பேஷாவர் மற்றும் அங்கிருந்து பராச்சினார் வரை அனுப்பப்பட்டேன், அங்கு நான் ஒரு இராணுவ தளத்திற்கு அனுப்பப்பட்டேன் " என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Sun, 06/27/2021 - 14:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை