காசா மீது மீண்டும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

இஸ்ரேலிய படைகள் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய படைகள் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலில் புதிய கூட்டணி அரசாங்கம் ஆட்சியைப் பிடித்த பின்னர் நடந்த முதல் தாக்குதல் சம்பவமாக பார்க்கப்படுகிறது.

உள்ளூர் நேரமான புதன்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் காசாவில் பல இடங்களில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்கப்பட்டது என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆனால், ஹமாஸ் போராளிக்குழுவால் இயக்கப்படும் வானொலி நிலையம் ஒன்று, பலஸ்தீனிய பயிற்சி முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறியது.

வான்வழி தாக்குதல் நடத்தியதை உறுதி செய்துள்ள இஸ்ரேல் இராணுவம், தெற்கு இஸ்ரேல் பகுதியில் தீப்பிடிக்கும் வகையிலான பலூன்கள் பறக்கவிட்டதற்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Thu, 06/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை