பாலியல் வன்முறைக்கு பெண்களின் ஆடைக் குறைப்பே காரணம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பெண்களின் ஆடைக் குறைப்பே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில் ஹெச்பிஓ தொலைக்காட்சியில் பங்கெடுத்த நேர்காணல் ஒன்றில், பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கு பெண்களின் ஆடைகளே காரணம் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹெச்பிஓ தொலைக்காட்சி நேர்காணலில் பாலியல் வன்முறை அதிகரிப்பு குறித்த கேள்விக்கு இம்ரான் கான் கூறும்போது, “பெண்கள் குறைவாக ஆடை அணிந்தால், அது ஆண்களை பாதிக்கும். அவர்கள் இயந்திரம் அல்ல. இது ஒரு பொதுவான அறிவு” என்று தெரிவித்துள்ளார்.

இம்ரான் கானின் இக்கருத்துக்கு பாகிஸ்தானின் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இம்ரான் கான் ஆணாதிக்கச் சிந்தனை கொண்டவர் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கடந்த 6 ஆண்டுகளில் பாகிஸ்தானில் 22,000 பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன. இதுவரை இந்தக் குற்றங்களின் தண்டனை விகிதம் 0.03 சதவீதம் மட்டுமே, இதுவரையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 77 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தானின் அதிகாரபூர்வத் தரவுகளை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

Thu, 06/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை