பாகிஸ்தானில் இராணுவத் தளம் அமைக்க அமெரிக்கா அவதானம்

ஆப்கானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேற ஆரம்பித்திருக்கும் நிலையில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இராணுவ உறவுகள் மேம்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பது சீனா மற்றும் இந்தியாவின் அவதானத்தை பெற்றுள்ளது.

ஆப்கானில் இஸ்லாமிய கடும்போக்காளர்கள் மற்றும் அமெரிக்க எதிர்ப்பு பயங்கரவாதிகள் மீண்டும் நுழைவதை தடுக்கவும் கண்காணிக்கவும் பிராந்தியத்தில் இராணுவத் தளம் ஒன்றை அமைக்க எதிர்பார்ப்பதாக பென்டகன் அறிவித்துள்ளது.

இந்தத் தளத்தை அமைப்பதில் பாகிஸ்தான் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் எமது நிலத்தில் இராணுவம் கால் வைக்கவோ இராணுவத் தளம் அமைக்கவோ அனுமதிக்கப்போவதில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷாஹ் மஹ்மூத் குறைசி தெரிவித்திருந்தார்.

Wed, 06/02/2021 - 12:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை