காலிக்கு சென்று அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விபரம் வெளியானது

காலி சுகாதார சேவைகள் பணிமனையில் இம்மாதம் 5,7 ஆகிய திகதிகளில் செலுத்தப்பட்ட அஸ்ட்ரா செனகா இரண்டாம் தடுப்பூசியை பெற்ற 632 பேரில் மேல் மாகாணத்தை சேர்ந்த 425 பேர் உள்ளடங்குவதாக காலி சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட திகதிகளில் மேல் மாகாணத்திலிருந்து பலர்,காலி மாவட்டத்துக்கு சென்று கொவிட்19 தடுப்பூசி செலுத்திக் கொண்ட சம்பவம் தொடர்பில் பெயர்கள் மற்றும் கையிருப்பிலுள்ள தடுப்பூசியின் விபரங்களை காவல்துறையினருக்கு வழங்குமாறு தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்தே மேல் மாகாணத்திலிருந்து காலிக்கு சென்று அஸ்ட்ரா செனகா இரண்டாம் தடுப்பூசியை பெற்ற 425 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

Mon, 06/28/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை