சீனக் கடற்படைக்கு இலங்கையில் புதிய துறைமுக திட்டங்கள் இந்தியாவின் நலனுக்கு ஆபத்து

இந்திய கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் ஜி.அசோக்குமார்

சீனக் கடற்படைக்கு இலங்கையில் புதிய துறைமுக திட்டங்கள் கிடைப்பது பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாமென இந்திய கடற்படையின் துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் ஜி. அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்த நடவடிக்கைகள் குறித்து இந்தியா உன்னிப்பாக கண்காணிக்க வேண்டுமெனவும் இந்திய கடற்படையின் துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் ஜி.அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கடல்சார் எல்லைகளை பாதுகாப்பதற்கு இந்திய கடற்படை சிறந்த முறையில் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், எங்களுக்கு எவரும் எந்த விதத்திலும் ஆச்சரியத்தை அளிக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீனக் கடற்படை துறைமுக திட்டங்களை பெறுவது ஆபத்தானதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்ய முயன்றீர்கள் என்றால் அது கடினமான விடயமென தெரிவித்துள்ள அவர் இந்த பிராந்தியத்திற்கு புதியவர் ஒருவர் அதிகளவு ஆர்வத்தை காண்பிக்க தொடங்கினால் அது எங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாமென
தெரிவித்துள்ளார்.இதனை உன்னிப்பாக நாங்கள் கண்காணிப்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் சீனக் கடற்படை புதிய துறைமுக திட்டங்களை பெறுவது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Mon, 06/21/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை